உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா!

வீரட்டானேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத   முருகப்பெருமான் வீதியுலா நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில், திருமுருகன் வைகாசி விசாக பெருவிழா கடந்த,   23ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு, மூலவர் வள்ளி தேவசேனாசமேத சிவசண்முக வேலவருக்கு வேள்வியுடன் மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 7:00 மணிக்கு  அலங்கரிக்கப்பட்ட வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான், முத்து விமானத்தில் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !