உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம்!

திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம்!

திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நேற்றிரவு, பூமி நீளாதேவி, கனகவல்லி தாயார் சமேத ஸ்ரீவீரராகவப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, அனுமந்த வாகனத்தில், சீதா லட்சுமணன் சமேத ராமச்சந்திரமூர்த்தி எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விஸ்வேஸ்வரர் கோவிலில், விசாலாட்சி அம்மன் உடனமர் விஸ்வேஸ்வர சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. பின், சுவாமி வீதி உலா நடந்தது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, ஸ்ரீவீரராகவப்பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் நடக்கிறது. அதேபோல், விஸ்வேஸ்வர சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு, சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம், 2:30 மணிக்கு, விஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடக்கிறது. நாளை மதியம், 2:30 மணிக்கு, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !