ராமநாதபுரத்தில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலம்!
ADDED :3781 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாகத்திருவிழா கோலாகலமாக நடந்தது. ராமநாதபுரம் வழிவிடு முருகன், சுவாமிநாத சுவாமி, பட்டணம்காத்தான் வினை தீர்க்கும் வேலவர், வாணி சுயம்பு வேலாயுதசுவாமி, குயவன்குடி சாது சுப்பையா, மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் கதிர்காமசக்தி வடிவேல், காந்தி நகர் சண்முகசடாச்சர வடிவேல் உள்ளிட்ட முருகன் கோயில்களில் வைகாசி விசாகத்திருவிழா மே 23 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதைமுன்னிட்டு முருகனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. விசாக நாளான நேற்று காலை 11 மணிக்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் நடந்தது.