விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :3838 days ago
கடலூர்: சின்னதிராசு கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பண்ருட்டி அடுத்த சின்னதிராசு கிராமத்தில் உள்ள விநாயகர், அங்காள பரமேஸ்வரி அம்மன், பாவாடைராயன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 31ம் தேதி அனுக்ஞை, கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், முதல் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து 1ம் தேதி மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, அஷ்ட பந்தனம் சாத்துதல் நடந்தது. நேற்று (2ம் தேதி) காலை யாக பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்னை, பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி, விமானம் கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்÷ கற்று சுவாமி தரிசனம் செய்தனர்.