உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பவுர்ணமி திருவிளக்கு பூஜை

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பவுர்ணமி திருவிளக்கு பூஜை

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பல ஆண்டுகளாக பவுர்ணமி அன்று மாலை, 6:00 மணி முதல் 7:00 மணி வரை சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. பவுர்ணமி நாளான நேற்று, மாசாணியம்மனின் உற்சவ சிலைக்கு முன் நடந்த திருவிளக்கு பூஜையில் 25க்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள், சகல சவுபாக்கியங்களை வேண்டி திருவிளக்கு ஏற்றி, மஞ்சள் பிள்ளையாருக்கு மலர் அபிேஷகம் செய்தும், குத்துவிளக்குக்கு குங்கும அபிேஷகம் செய்தும், நெய்வேத்தியம் படைத்தும் அம்மனை வழிபட்டனர். பின்னர் மாசாணியம்மனுக்கு நடைப்பெற்ற மகா அபிேஷகத்தை கண்டு பூஜையை நிறைவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !