பண்ருட்டி முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!
கடலூர்: பண்ருட்டி, அண்ணாகிராமத்தில் உள்ள விநாயகர், முருகன், செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று (2ம் தேதி) காலை விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், மாலை வாஸ்து சாந் தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை நடந்தது. இன்று (3ம் தேதி) காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, புதிய விக்ரகங்கள் கரிக்கோலம், இரவு 7:00 மணிக்கு அம்மன் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாத்துதல், மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. நாளை (4ம் தேதி) காலை நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, 9:30 மணிக்கு கடம் புறப்பாடு, 10:00 மணிக்கு கும்பாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு வீதியுலா நடக்கிறது. 5ம் தேதி முதல் மண்டலாபிஷேகம் நடக்கிறது.