உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் தங்கி இடைப்பாடி பக்தர்கள் சுவாமி தரிசனம்

பழநி கோயிலில் தங்கி இடைப்பாடி பக்தர்கள் சுவாமி தரிசனம்

பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஸ்ரீ பர்வத ராஜகுல காவடி குழுவினர் இரவில் தங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.


பழநி தைப்பூச திருவிழா பிப்.,4,ல் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த பர்வத ராஜகுல பக்தர்கள், காங்கேயம், தாராபுரம் வழியாக மானுரை வந்தடைந்தனர். மானூர் சண்முக நதி அருகே பூஜைகள் நடைபெற்றது. பெரியநாயகி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தனர். நேற்று காவடிகளை மானூர் சண்முக நதிக்கு கொண்டு வந்தனர். அங்கு பூஜைகள் நடைபெற்றது. பெரியநாயகி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தனர். மேளதாளங்கள் முழங்க கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பால் காவடி, தீர்த்த காவடி, இளநீர் காவடி, மயில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து வந்தனர். காவடிகளுக்கு வழிபாடு நடைபெற்ற பின் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தனர். அதன் பின் பழநி முருகன் கோயிலுக்கு சென்று அங்கு காவடிகளை செலுத்தி வழிபாடு செய்தனர். சர்க்கரை, பேரிச்சம்பழம், தேன், கற்கண்டு, நெய், ஏலக்காய், வாழைப்பழங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் பெரிய அண்டாக்களில் 15 டன் அளவுள்ள பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின் இரவில் வெளிப்பிரகாரத்தில் பர்வத ராஜகுல மக்கள் தங்கி இருந்தனர். பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இன்று அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !