உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சமுக ஆஞ்சனேயர் கோவிலில் சம்ப்ரோக்ஷணம்

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோவிலில் சம்ப்ரோக்ஷணம்

திருப்பந்தியூர்: திருப்பந்தியூர் பஞ்சமுக ஆஞ்சனேயர் கோவிலில், வரும் 5ம் தேதி, மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது. பஞ்சலோக சிலை கடம்பத்துார் ஒன்றி யம், திருப்பந்தியூரில் உள்ளது பஞ்சமுக ஆஞ்சனேயர் கோவில். இங்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து, ஏழுமலையான் அனுக்கிரகத்துடன், ஆஞ்சனேயர் பஞ்சலோக சிலை வரவழைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, வரும் 5ம் தேதி, மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. முன்னதாக, 4ம் தேதி, காலை 9:00 மணிக்கு, கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. பின் காலை 11:00 மணிக்கு, புதிய சிலைக்கு கரிகோலமும், மாலை 5:00 மணிக்கு சங்கல்பமும், வாஸ்து சாந்தியும், அக்னி பிரதிஷ்டையும் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு, கும்ப ஆராதனமும், மகாசாந்தி திருமஞ்சனமும், இரவு 9:00 மணி, முதல் கால பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடைபெறும்.

ஊஞ்சல் சேவை: பின், 5ம் தேதி காலை 6:00 மணிக்கு, விஸ்வரூப தரிசனமும், மகா சங்கல்பமும், காலை 7:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாளுக்கு ஊஞ்சல் சேவையும், காலை 8:15 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், காலை 8:30 மணிக்கு, கும்ப புறப்பாடும், காலை 8:45 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சனேயர், விமானம் மற்றும் புதிய ஆஞ்சனேயர் உற்சவர் சிலைக்கு மகா சம்ப்ரோக்ஷணமும் நடைபெறும். அதன் பின், காலை 9:15 மணிக்கு சாத்துமுறை, சர்வ தரிசனமும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !