மகிஷாசூரமர்த்தினி கோவிலில் பாலாபிஷேகம்!
ADDED :3778 days ago
திருத்தணி: மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று பவுர்ணமியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலின் உபகோவிலான மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று பவுர்ணமியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் பாலாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு மதியம், 12:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, ஐந்து கலசங்கள் அமைத்து சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. இரவு, 7:30 மணிக்கு, உற்சவர் அம்மன் கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.