உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 7ல் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

7ல் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சொரக்காய்பேட்டை: சொரக்காய்பேட்டையில், சம்பத்து விநாயகர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மூலவர், வலம்புரி விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை முருகன், நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் மற்றும் கோவில் கோபுரத்திற்கு, வரும் ஞாயிற்றுக்கிழமை, காலை 9:00 மணிக்கு, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சனிக்கிழமை, காலை 9:00 மணிக்கு, புதிய சிலைகள் கரிக்கோல ஊர்வலம் நடைபெறும். ஞாயிறு, காலை 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்று மாலை 6:00 மணிக்கு உற்சவர் வீதியுலா. வெள்ளி முதல் ஞாயிறு வரை கோவில் வளாகத்தில், தினசரி ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !