வில்வார்ச்சனையின் பயன்!
ADDED :3820 days ago
செனனமூன் றிற்செய்த பாதகம் ஒழிக்குமுன்
சென்ற குலம் எழு மூன்றையும்
சிவபுரத் துய்க்கும்ஐ யாயிரம் கரிகளொடு
செப்ப ருங்கபி லைகோடி
வினவுசுப லட்சண மிகுந்தகன் னிகைகோடி
வேண்டிய பயனு தவுமேன்
மேதகும் சாளக்கி ராமமா யிரமுதவல்
விரிதட மீரைந் துகோடி
கனகமகம் ஆயிரம் கோடிபுரி பயனுநற்
கதிபெற விரும்பி னுமெமைக்
கருதியுள் ளன்பொடொரு கூவிளம் சாத்தியே
கசிந்தவர்க்கு எய்தும் என்றாய்
தினமுமுன தாயிரம் திருநாம அர்ச்சனைகள்
செய்தூமூ வாயிர வர்வாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.