உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்ன மூர்த்தங்களுக்கு இன்ன மலர்களைக் கொண்டு அருச்சிக்கலாகாது!

இன்ன மூர்த்தங்களுக்கு இன்ன மலர்களைக் கொண்டு அருச்சிக்கலாகாது!

உந்திபூத் தொளிருமா லவனையட் சதைகளால்
உலகில்அர்ச் சிக்க லாகா(து)
உமையவளை அலர்பாதி ரிப்பூவி னால்அவட்கு
ஒருபங்கு அளித்த வுனைமுன்
வந்துபொய்ச் சான்றுபுகல் கேதகையின் மலராலும்
மாவிநா யகனை வாச
வண்டுழா யிலையாலும் இரவியைத் தும்பையொடு
வயிரவரை அலரி வாச
நந்தியா வர்த்தமுடன் அறுகினால் விந்தையையும்
நாளும்அர்ச் சிக்க லாகாது
நவில்இதனில் இவரையர்ச் சிக்கின்நர(கு) உறுவரென
நல்லஆ கமம்உ ரைத்தாய்
செந்திரு அனந்தவடி வங்களொ டுறைந்தெழில்
சிறந்திடு பெரும்ப தியதாம்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !