கொத்தட்டை கூத்தாண்டவர் கோவில் விழா!
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில், நுாற்றுக்கணக்கான அரவாணிகள் தாலி கட்டிக் கொண்டு ÷ நர்த்திக்கடன் செலுத்தினர். கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில், அரவாணிகள் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இத்திருவிழா, கடந்த மாதம் 25ம் தேதி சிறப்பு பூஜை செய்து, கொடியேற்றத்துடன் துவங்கியது. 29ம் தேதி அர்ச்சுனன்– திரவுபதி திருக்கல்யாணம், சுவாமி வீதியுலா, 31ம் தேதி மாடுபிடி சண்டை நடந்தது. நேற்று முன்தினம் இரவு, அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மும்பை, குஜராத், டில்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நுாற்றுக்கணக்கான அரவாணிகள் கலந்து கொண்டனர். இரவு 10.௦௦ மணிக்கு, அரவாணிகளுக்கு கோவில் பூசாரி ராமதாஸ் தாலி கட்டினார். தொடர்ந்து, அரவாணிகள் ÷ காவில் வளாகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நேற்று திருத்தேர் உற்சவம், மாலை 5:00 மணிக்கு அரவாண் களபலி நடந்தது.