உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டத்தரசியம்மனுக்கு திருக்கல்யாணம்!

பட்டத்தரசியம்மனுக்கு திருக்கல்யாணம்!

சூலுார் :  வெங்கிட்டாபுரம் பட்டத்தரசியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சூலுார் அடுத்த வெங்கிட்டபுரம் ஏ.டி.காலனி  பட்டத்தரசியம்மன் கோவில் பழமையானது. இங்கு திருவிழாவை ஒட்டி அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.  தொடர்ந்து பட்டத்தரசியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று  சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. மஞ்சள் நீராடலுடன் விழா நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை திருவிழா கமிட்டியினர்  செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !