உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சமுக ஆஞ்சநேயர் பிரதிஷ்டை தினம்

பஞ்சமுக ஆஞ்சநேயர் பிரதிஷ்டை தினம்

திருவள்ளூர்: திருவள்ளூர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், 12ம் ஆண்டு பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, நாளை, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஹோமம் நடக்கிறது. திருவள்ளூர், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் சிலை, 2006ம் ஆண்டு, ஜூன் 6ம் தேதி, பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, 12ம் ஆண்டு பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு மூலவருக்கு நாளை காலை, 9:00 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடைபெறும். மேலும், காலை 9:00 மணியளவில், கோவில் வளாகத்தில் மூலமந்திர ஹோமம் நடைபெற உள்ளது. மாலை, 5:00 மணிக்கு பஞ்சமுக சகஸ்ரநாமம் நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !