ஷீரடி சாய்பாபா தியான மண்டபம் கட்ட பூமி பூஜை
ADDED :3879 days ago
ராசிபுரம் : ராசிபுரத்தில், ஷீரடி சாய்பாபா, பிரார்த்தனை, ஸ்தல தியான மண்டபம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. ராசிபுரம், பட்டணம் ரோடு, மாரப்ப கவுண்டர் தோட்டம், மின்சார அலுவலகம் அருகில், ஷீரடி சாய்பாபா பிரார்த்தனை ஸ்தல தியான மண்டபம் கட்டும் பணிக்கான பூமிபூஜை விழா நடந்தது. ஷீரடி சாய்பாபா டிரஸ்டி நிர்வாகி குமார் தலைமை வகித்தார். நிர்வாகி இளங்கோ வரவேற்றார். சேலம் கிரானைட் நிறுவன உரிமையாளர் குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து பூமிபூஜை நடத்தப்பட்டது. ஷீரடி சாய்பாபா டிரஸ்டி நிர்வாகிகள் சீனிவாசன், செந்தில்குமார், மகேஸ்வரி, கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.