12 ஆண்டுகளுக்கு பின் எருதுகட்டு திருவிழா!
ADDED :5245 days ago
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கையில் 12 ஆண்டுகளுக்கு பின் முனீஸ்வரர் கோயில் புரவி எடுப்பு விழாவினை முன்னிட்டு எருதுகட்டு திருவிழா நடந்தது. விழாவில் மதுரை அரியகுடி, காஞ்சிரங்குடி, சின்னகீரமங்கலம், ஆதியாகுடி, சேந்தனி, ஓடைக்கால் உட்பட பல பகுதிகளிலிருந்து எருதுகள் கொண்டு வரப்பட்டன. அலங்காநல்லூர், சோழவந்தான் மாடுபிடி வீரர்கள் எருதுகளை பிடித்தனர். இளையராஜா என்ற வீரர் காயமடைந்தார்.