அமர்நாத்தில் 7வது குழு யாத்திரை!
ADDED :5245 days ago
ஜம்மு : காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில் இருந்து, நேற்று ஏழாவது குழு தனது அமர்நாத் யாத்திரையைத் துவக்கியது. அமர்நாத் யாத்திரை, இடையில் நிறுத்தப்பட்டு பின் துவக்கப்பட்டது. அதன்பின் இதுவரை 22,895 பேர் அடங்கிய, ஏழு குழுக்கள் தங்கள் யாத்திரையைத் துவக்கியுள்ளன. ஜம்முவின் "பேஸ் கேம்ப்பில் இருந்து நேற்று, 791 பெண்கள், 90 குழந்தைகள், 209 சாதுக்கள் உட்பட 3,267 பேர் அடங்கிய, ஏழாவது குழு தனது யாத்திரையைத் துவக்கியது. இவர்களுக்கான பாதுகாப்புப் பணியில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.