துத்திப்பட்டு கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :3775 days ago
வில்லியனூர்:துத்திப்பட்டு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.வில்லியனூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 4ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. அன்று இரவு முதற்கால யாக பூஜை நடந்தது.
நேற்று (5ம்தேதி) காலை 6:00 மணிக்கு யாக சாலை பூஜையும், மஹா பூர்ணாஹூதி யாத்ராதானம், காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 10:10 மணிக்கு கோவில் விமானத்திற்கும், மூலவருக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.ராதாகிருஷ்ணன் எம்.பி., கார்த்திகேயன் எம்.எல்.ஏ., என்.ஆர்.காங்., பிரமுகர்கள் ஜெயக்குமார், ராமநாதன், ஜெய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மாலை 6:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.