உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோவிலில் 108 கலசாபிஷேகம்!

சிவன் கோவிலில் 108 கலசாபிஷேகம்!

கள்ளக்குறிச்சி : நீலமங்கலம் சிவன் கோவிலில் 108 கலசாபிஷேகம் நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் சிவன் கோவிலில், காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் ஜென்ம ஜெயந்தியை முன்னிட்டு, 7ம் ஆண்டு கலசாபிஷேக வைபவம் நடந்தது.

நேற்று காலை 5:00 மணிக்கு, பஞ்சமூர்த்தி தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மண்டபத்தில் 108 கலசங்கள் வைத்து, அதில் பிரதான 2 கும்ப கலசங்களில் சிவன், அம்மனை ஆவாஹனம் செய்தனர். சிறப்பு அபிஷேகங்களுக்குப் பின், பகல் 1:30 மணிக்கு சுவாமிக்கு 108 கலசாபிஷேகம் நடந்தது. மாலை 5:30 மணியளவில் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் திருவுருவ படத்திற்கு அலங்காரம், புஷ்பாஞ்சலி செய்து, பஜனை பாடல்களுடன் வீதியுலா உற்சவமும் நடந்தது.காஞ்சி சங்கரா கலை, அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர் சினகணேஷ் தலைமையிலான குழுவினர் வைபவங்களை செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !