உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாமுண்டீஸ்வரி கோவில் தேர் கரிக்கோல பவனி!

சாமுண்டீஸ்வரி கோவில் தேர் கரிக்கோல பவனி!

திருவெண்ணெய்நல்லூர் : பேரங்கியூர் சாமுண்டீஸ்வரி கோவில் தேர் கரிக்கோல பவனி நேற்று நடந்தது.

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூரில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டு, நேற்று கரிக்கோல பவனி நடந்தது. காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. 7:00 மணிக்கு அரச மர விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கலச பூஜைகள் செய்யப்பட்டு, காலை 8:05 மணிக்கு தேருக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு, வெள்ளோட்டம் விடப்பட்டது.

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மாட வீதிகளின் வழியே, புதிய தேரை இழுத்துச் சென்றனர். காலை 10:30 மணிக்கு தேர், தன் நிலையை அடைந்ததும், வெள்ளோட்டத்தில் கொண்டு செல்லப்பட்ட புனித நீரால், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.இதில் எம்.பி., ராஜேந்திரன், தொழிலதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன், பாலசுப்ரமணியன், ஜெயச்சந்திரன், பாபு, ஊராட்சி தலைவர் வேலாயுதம், மாவட்ட கவுன்சிலர் முத்தமிழ்ராஜகோபால், கூட்டுறவு வங்கி தலைவர் பூராசாமி. தேர் திருப்பணிக்குழு உறுப்பினர்கள் ஆதிமூலம், மூர்த்தி, ராமமூர்த்தி, கலியபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !