புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றம்!
ADDED :3778 days ago
கோவை:கோவை புலியகுளம் புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. விழாவிற்கு கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் தலைமை வகித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஜார்ஜ் தனசேகர் அடிகள் கூறியதாவது: கோடி அற்புதர் என போற்றப்படும் புனித அந்தோணியாரின் தேர்த்திருவிழா ஜூன், 14ம் தேதி நடக்க உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு ஜூன், 1ம் தேதி முதல், 13ம் தேதி வரை நவ நாட்களாக கடைப்பிடிக்கப்படுகிறது.தேர்த்திருவிழா நாள் அன்று கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற உள்ளது. பக்தர்கள் இந்த நவநாட்களிலும், திருவிழாவிலும் பங்கு பெற்று புனித அந்தோணியாரின் இறை ஆசியை பெற வேண்டுகிறோம். இவ்வாறு, ஜார்ஜ் தனசேகர் அடிகள் கூறினார்.