உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேத்தனூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!

கேத்தனூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!

பல்லடம்: கேத்தனூர் பத்மாவதி சமேத சீனிவாச பெருமாள் மற்றும் பெருமாள்சாமி நாயுடு, லட்சுமியம்மாள், பெருமாளம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.கடந்த, 5ம் தேதி, ஹோமம், தன பூஜை, புற்றுமண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், காப்புக்கட்டும் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரண்டாம், மூன்றாம் கால ஹோமம், கோபுர கலசம் வைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, நான்காம் கால மூல மந்திர பூஜை நடந்தது. 12 ஹோம குண்டங்கள் வளர்க்கப்பட்டு, பெருநிறை வேள்வி யாகம் செய்யப்பட்டது.

பின், விமானம், மூலவர் மற்றும் பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.அதன்பின், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தோசட்ல கோத்ரம் முசுன்னார் அறக்கட்டளை நிர்வாகிகள், விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. குனியமுத்தூர் லட்சுமி நாராயண பெருமாள் குழுவினரின் பஜனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !