உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் மஸ்தான் சாகிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா!

காரைக்கால் மஸ்தான் சாகிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா!

காரைக்கால் மஸ்தான் சாகிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா மின்சார சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.

காரைக்கால் மஸ்தான் சாகிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் 192 வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று பகல் இரதம், பல்லக்கு ஊர்வலம் நடந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு ஹலபு என்னும் போர்வை வீதி உலா நடந்தது. பின் சாம்பிராணி சட்டி வீதி உலா நடந்தது. இரவு 12.30 மணிக்கு மின்சார சந்தனக்கூடு வீதி உலா துவங்கியது. அதிகாலை 4 மணிக்கு சந்தனம் பூசுதல் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜவேல், எம்.எல்.ஏ., நாஜீம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்திலிருந்து  இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். நாளை 9ம் தேதி கொடி இறக்கம் நடக்கிறது. இவ்விழாக்கான ஏற்பாடுகளை வக்ஃபு நிர்வாக  சபை மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா சிறப்பாக செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !