உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகோபால சுவாமி தேரில் வீதியுலா!

ராஜகோபால சுவாமி தேரில் வீதியுலா!

விருத்தாசலம்: ராஜகோபால சுவாமி கோவில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டத்தில் ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர்.

விருத்தாசலம் பெரியார் நகர் ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பதாம் நாள் உற்சவமாக தேரோட்டத்தை யொட்டி, நேற்று காலை 7:00க்கு மேல் 7:30 மணிக்குள் தேருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, 8:00 மணியளவில் அலங்கரித்த திருத்தேரில் ராஜகோபால சுவாமி சமேத கோலத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.

ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பகல் 12:00 மணிக்கு திருமஞ்சனம், சேவாகாலம், சாத்துமுறை, மாலை 5:00 மணிக்கு மணிமுக்தாற்றில் தீர்த்தவாரி நடந்தன. இன்று பத்தாம் நாள் உற்சவமாக சிறப்பு திருமஞ்சனம், புஷ்ப யாகம், இரவு பல்லக்கு புறப்பாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !