கீழ்புத்துப்பட்டு மஞ்சனீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டம்!
ADDED :3778 days ago
மரக்காணம் : கீழ்புத்துப்பட்டு மஞ்சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு அன்னதான திட்டம் துவங்கப்பட்டது.
மரக்காணம் ஒன்றியம், கீழ்புத்துப்பட்டு மஞ்சனீஸ்வரர் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அன்னதான திட்டம் நடந்தது. முன்னதாக மஞ்சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகளை, கிருபாநிதி குருக்கள் செய்தார். ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ரவிவர்மன் தலைமை தாங்கி அன்னதான திட்டத்தை துவக்கி வைத்தார் ,ஒன்றிய தலைவர் கோவிந்து, துணை சேர்மன் பாண்டுரங்கன், கவுன்சிலர்கள் புஸ்பா ஞானவேல், பாண்டுரங்கன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயமூர்த்தி, கந்தன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட மீனவரணி இணைசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சிசெயலாளர் குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.