ஸ்ரீரங்கம் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்!
ADDED :3779 days ago
திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இம்மாதம், 30ம் தேதி ஜேஷ்டாபிஷேகமும், ஜூலை, 1ம் தேதி திருப்பாவாடை திருநாளும் நடக்கிறது.
ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு, நம்பெருமாள் சன்னதியில் வரும், 30ம் தேதி முழுவதும் மற்றும் ஜூலை, 1ம் தேதி மாலை, 4.30 மணி வரை மூலஸ்தான சேவை கிடையாது. காலை, 7 மணிக்கு திருமஞ்சன தீர்த்தம் காவிரியில் இருந்து, தங்கக் குடத்தில் எடுத்து, யானை மேல் வைத்து கொண்டு வரப்பட உள்ளது.அதே போல், தாயார் சன்னதியில் ஜூலை, 10ம் தேதி ஜேஷ்டாபிஷேகமும், 11ம் தேதி திருப்பாவாடை திருநாளும் நடக்கிறது. அதை முன்னிட்டு ஜூலை, 10ம் ÷தி முழுவதும் மற்றும் 11ம் தேதி மாலை, 4.30 மணி வரை தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது, என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.