காஞ்சி பெரியவர் ஜெயந்தி விழா!
திண்டிவனம்: காஞ்சி சங்கரமடம் பெரியவரின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. காஞ்சி சங்கரமடம் ஸ்ரீ மஹா பெரியவர் என்றழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா, திண்டிவனத்தில் கொண்டாடப்பட்டது. வசந்தபுரம் சுந்தர அய்யர் இல்ல வளாகத்தில், நடந்த விழாவில் 2 ம் தேதி காலை 7 மணிக்கு கலச ஆவாஹனத்துடன் துவங்கியது. ஆவஹந்தி ஜப ஹோமம், விஷ்ணு, லலிதா சஹஸ்ரநாம பாரா யணம், தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு, அங்காளம்மன் கோவில் அருகில் அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு மஹா பெரியவரின் திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது. இதனை, மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள், துவக்கி வைத்தார். விழாவில் பி.ஆர். எஸ்., உரிமையாளர் ரங்கமன்னார், ஸ்டேட் பாங்க் கிளை மேலாளர் கண்ணன், வழக்கறிஞர் சங்கரன், கல்கண்டு சுந்தரம் திண்டிவனம் புரோகிதர் நல சங்கத்தினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்@கற்றனர். விழா ஏற்பாடுகளை நாகராஜ் அய் யர், முருக்கேரி சீனுவாச சுவாமிகள் செய்திருந்தனர்.