உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கயிலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்!

கயிலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்!

திருவாரூர்: திருவாரூர் அருகே பள்ளிவாரமங்களம் அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை அருள்மிகு கயிலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுப் பகுதியினர் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர்.  திருவாரூர் அருகே பள்ளியாரமங்களத்தில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை அருள்மிகு கயிலாசநாதர் கோவில் இந்து சமய அற நிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்தாமல் சுமார் 200 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால், கோவில் வளாகம் முழுவதும் முட்புதற்கள் மண்டி கிடந் தது. அப்பகுதியினர் நிர்வாக குழு அமைத்து கும்பாபிஷே பணிகளை துவங்கினர்.  அதன் பின்னர் காமாட்சியம்மன் உடனுறை அருள்மிகு கயிலாசநாதர், வினா யகர், முருகன்,காமாட்சியம்மன், ஐயனார், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்கை உள்ளிட்ட பரிவாரதெய்வங்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்காக கடந்த 6ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள், கணபதிேஹாமம் மற்றும் லட்சுமி பூஜையுடன் துவங்கியது. தினசரி பல்வேறு பூஜைகளுடன் நேற்று காலை 6.30 மணிக்கு நான்காம் கால யாக வேள்வியும், 9.00 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாரதனையும் கடம் புறப் பாடும் துவங்கியது.  காலை 9.30 மணிக்கு விமானம் மஹா கும்பாபிஷேகமும், 10 மணிக்கு மூல ஸ்தனம் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுப்பகுதியினர் பங்கேற்று சுவா மிதரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங் கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !