எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு சலங்குகாரத் தெருவில் நேற்று மூன்று கோவில்களில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஆயி ரக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு சலங்குக்காரத் தெருவில் உள்ள அரசமரத்தடி விநாயகர், எல்லையம்மன், ஓடக்கரை மாரியம்மன் ஆகிய மூன்று கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி, கடந்த 4ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து 5ம் தேதி ஓடைக்கரையம்மன் கோவிலில் எல்லையம்மனுக்கு அபிஷேக தீபாராதனை நடந்தது. 6ம் தேதி விநாயகர் வழிப்பாடு, யாக சாலை பிரவேசம் முதல் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் (7ம் தேதி) இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகத்தினமான நேற்று (8ம் தேதி) காலை நான்காம் கால யாகசாலை பூஜையும், ஓடைக்கரையம்மன் யாகத்தில் இருந்து யாத்ராதானம் கலசம் புறப்பாடாகி காலை 6:30 மணிக்கு விநாயகர் கோவில், 7:10 மணிக்கு ஓடைக்கரை மாரியம்மன் கோவில், 10:01 மணிக்கு எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் பரங்கிப்பேட்டையைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள் செய்திருந்தனர்.