உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!

பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த டி.நெடுஞ்சேரி புத்துõர் கிராமத்தில் உள்ள பர்வதவர்தணி சமேத பசுபதீஸ்வரர் கோவில்   கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 5ம் தேதி காலை 8:00 மணிக்கு அனுக்ஞை பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து   விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கோபூஜை, கணபதி ஹோமம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், ரக்ஷாபந்  தனம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. 9:30 மணிக்கு பூர்ணாகுதியும், தீபாராதனையும் நடந்தது. 6ம் தேதி   காலை 8:00 மணிக்கு விசேஷ சந்தி, இரண்டாவது கால யாகசாலை பூஜையும், 11:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று   முன்தினம்  (7ம் தேதி) காலை 5:30 நான்காம் கால யாசாலை பூஜை துவங்கியது. 7:30 மணிக்கு தீபாராதனையும் தொடர்ந்து கடம் புறப்பாடாகி 8:30   மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !