உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துக்குமாரஸ்வாமி கோவில்: கும்பாபிஷேக விழா கோலாகலம்

முத்துக்குமாரஸ்வாமி கோவில்: கும்பாபிஷேக விழா கோலாகலம்

ராசிபுரம்: முத்துக்குமாரஸ்வாமி கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். ராசிபுரம் அடுத்த, பாச்சல் முத்துக்குமாரஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 5ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம், புண்யாகவாசம், கும்ப அலங்காரம் நடந்தது.நேற்று முன்தினம், புதிய விக்ரகங்களுக்கு கண்திறப்பு, விமான கோபுர கலசம் வைத்தல், அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு, யாக சாலை பூஜை, கடம் புறப்பாடும், அதை தொடர்ந்து, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஸ்வாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !