முனியசாமி கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :3786 days ago
சாயல்குடி: சாயல்குடி அருகே ஒச்சத்தேவன்கோட்டையில் உள்ள முனியசாமி கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை 9 முதல் 10.30 மணி வரை யாகம் வளர்த்து, சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்தம், அன்னதானம் நடந்தது. காணிக்கூர் ஊராட்சி தலைவர் காளிமுத்து, மாநில பா.ஜ., விவசாய அணி குழு உறுப்பினர் முருகவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.