உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செவிலிமேடு திரவுபதி அம்மன் கோவிலில், தீமிதி திருவிழா நடைபெற்றது. காஞ்சிபுரம், செவிலிமேடு பகுதியில், திரவுபதி அம்மன் உடனுறை தருமராஜர் கோவில் உள்ளது. இக்கோவில் வசந்த விழா, கடந்த மாதம் 14ம் தேதி துவங்கியது. நாள்தோறும் சொற்பொழிவு, மகா பாரத நாடகம் நடைபெற்று வந்தது. இந்த உற்சவத்தில் முக்கிய நிகழ்ச்சியாக துரியோதனன் படுகளம், நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம், இரவு 7:30 மணியளவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில், அப்பகுதிவாசிகள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேற்ற, அக்னி குண்டத்தில் இறங்கினர். இந்த நிகழ்ச்சியில், பெண்கள் உட்பட, 100க்கும் மேற்பட்டோர் தீ மிதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !