நவக்கிரக கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3787 days ago
தர்மபுரி : தர்மபுரி அடுத்த, அவ்வை நகர், பழைய குவார்ட்ரஸில், வரசித்தி விநாயகர், பாலமுருகன், பக்த ஆஞ்சநேயர், துர்கா பரமேஸ்வரி, தட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரக கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.விழாவில், கணபதி பூஜை, கணபதி ஹோமம், மஹா லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், முதல்கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. அதியமான்கோட்டை கால பைரவர் கோவில் சிவாச்சாரியார் கிருபாகரன் தலைமையில், கும்பாபிஷேகத்திற்கு, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றினர்.தொடர்ந்து, ஸ்வாமிக்கு அபிஷேகம், ராஜ அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.