அங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :4142 days ago
காரைக்கால்: அங்காள பரமேஸ்வரி கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.காரைக்கால், நெடுங்காடு அடுத்த மணல்மேடு கிராமத்தில் உள்ள, அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள், நேற்று முன்தினம் துவங்கியது. இதைதொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.