உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரசக்தி ஆஞ்சநேயர் கோவில் 12ம் தேதி கும்பாபிஷேகம்!

வீரசக்தி ஆஞ்சநேயர் கோவில் 12ம் தேதி கும்பாபிஷேகம்!

சேத்தியாத்தோப்பு: வீரமுடையாநத்தம் வீரசக்தி ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 12ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தையெ  õட்டி, வரும் 11ம் தேதி காலை 9.00 மணிக்கு கோமாதா பூஜையுடன், புற்றுமண் எடுத்தல், யாகசாலை வேள்விகள் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு   பூர்ணாகுதி பூஜையும், மகா தீபாராதணையும், மாலை 4:00 மணிக்கு 28 கும்ப ஸ்தாபனம், பூஜை அலங்கார மகா அபிஷேகம் நடக்கிறது. மாலை 6:00   மணிக்கு யாக சாலை பூஜை, இரவு 8:30 மணிக்கு பூர்ணகுதி சாற்று முறையும், மகா தீபாராதனையும் நடக்கிறது. மறுநாள் 12ம் தேதி காலை 6:00   மணிக்கு சுப்ரபாத பூஜையுடன் துவங்கி, மூர்த்தி வேள்விகள், பாராயணங்களும், 8:30 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:00 மணிக்குமேல் 9:30 மணிக்கு   விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !