சிறுமுகை அருகே எமதர்மர் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :3788 days ago
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே புதிதாக கட்டிய எமதர்மர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. மேட்டுப்பாளையம் அடுத்த, சிறுமுகை அருகேவுள்ள சென்னம்பாளையத்தில், புதிதாக எமதர்மர் கோவில் கட்டப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா கடந்த, 6ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அன்று இரவு, எமதர்மர், காலகாளேஸ்வரர், இன்ப விநாயகர் ஆகிய சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்து, மருந்து சாற்றப்பட்டன. பெரியநாயக்கன்பாளையம் சேதுராம ஐயர் தலைமையில் வேள்வி பூஜைகள் நடந்தன. 7ம் தேதி காலை, 8:00 மணிக்கு, சுவாமி சிலைகள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அபிஷேக அலங்கார பூஜையும், அன்னதானமும் நடந்தது. எமதர்மர் எருமை வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.