நன்றாக படியுங்கள்!
ADDED :3939 days ago
இன்றைய நாகரிகத்திற்கும், வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கும் கல்வி அவசியம். கற்பவர், சமுதாயத்தில் சிறப்பிடம் பெறுகிறார். ஆகவே, எவ்வளவு கஷ்டப்பட்டாவது கல்வியை கற்க வேண்டும். கல்வியின் மகத்துவத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது. உழைத்து சம்பாதித்த பணத்தில் ஒரு பொருள் வாங்குகிறீர்கள். சில நாட்களில் அப்பொருள் தொலைந்து விடுகிறது. அதை தேடி பல இடங்களிலும் அலைகிறீர்கள். சில நாட்கள் கழித்து அது ஓரிடத்தில் இருப்பதாக உங்களுக்கு தெரிகிறது. அப்போது நீங்கள் அதைத் திரும்ப பெறுவதற்கு எவ்வளவு விரைவாக செயல்படுவீர்களோ, அதைப்போலவே எங்கு கல்வி போதிக்கப்படுகிறதோ, அங்கு விரைந்து சென்று கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது இஸ்லாம்.