சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோயில் தேரோட்டம்!
ADDED :3787 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. காலை 9 மணி க்கு சர்வஅலங்காரத்தில் அம்மன் தாசில்தார் ராம்குமார், பதஞ்சலி சில்க்ஸ் சுப்பிரமணியம், ஆர்.ஐ., பிரதீபா, இன்ஸ்பெக்டர் கமலி, எஸ்.ஐ.,முத்துக்குமார், மின் உதவிபொறியாளர் கிரிஜார் தேர்வடத்தை இழுக்க, பக்தர்கள் தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் வலம் வந்து, மதியம் ஒரு மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. இன்றிரவு 10 மணிக்கு வைகை ஆற்றில் அம்மனுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.