உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா துவங்கியது

வரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா துவங்கியது

கடலூர்: கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் பகவத் அனுக்ஞை பூஜையும், மாலை 6 மணிக்கு மிருசங்கரஹணம், வாஸ்து சாந்தி, கருடதுவஜப் பிரதிஷ்டை மற்றும் அங்குராப்பணம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரமேற்சவ விழா துவங்கியது. சிறப்பு பூஜையை தொடர்ந்து உபநாச்சியாருடன் வீதியுலாவும், இரவு 8 மணிக்கு ஹம்ச வாகனத்தில் வீதியுலாவும் நடந்தது. வரும் 10ம் தேதி காலை 7 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவு தங்க கருட வாகன மகோத்சவம் நடக்கிறது. 11ம் தேதி காலை 9 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 4 மணிக்கு துவாதச ஆராதனை, புஷ்பயாக உற்சவம், அவரோஷனம், பூர்ணாஹூதி மற்றும் கும்பரோக்ஷணம் நடக்கிறது. 12ம் தேதி காலை 10 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு விடையாத்தி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !