செஞ்சி கோவில் குளங்களை தூர் வார கோரிக்கை!
செஞ்சி: செஞ்சி ஏகாம்பரேஸ்வரர், அருணாச்சலேஸ்வரர் கோவில் குளங்களை தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழல் எதிர் ப்பு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். செஞ்சி ஊழல் எதிர்ப்பு இயக்க செயலாளர் கண்ணாயிரம் திண்டிவனம் சப் கலெக்டரிடம் கொடுத் துள்ள மனுவில் கூறியிருப்பதாவது : செஞ்சி நகரில் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ளது. வரலாற்று பழமை வாய்ந்த செஞ்சி நகரில் நிலத்தடி நீ ரையும், மழை நீரையும் பாதுகாக்க ஏராளமான குளங்களை அமைத்துள்ளனர். இந்த குளங்கள் காலப்போக்கில் ஆக்கிரமிப்பினால் அழிந்து போன தால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. எஞ்சி உள்ள குளங்களுக்கு நீர் வரும் வாய்க்கால்களும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் இந்த குளங்களும் அழிந்து விடும் அபாயம் உள்ளது. செஞ்சி பீரங்கிமேட்டில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் குளம், ஏகாம்பரேஸ்வரர் கோவில் குளம், பண்டிதர் தெருவில் உள்ள குளம் ஆகியவற்றிக்கு தண்ணீர் வரும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் குளங்கள் தூர்ந்து ÷ பாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், குளங்களை தூர்வாரி மழை நீரை முழுமையாக சேகரித்து செஞ்சி நகரின் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கேட்டு கொண்டுள்ளார்.