அபிநவ மந்த்ராலயத்தில் அரசு வேம்பு கல்யாணம்!
ADDED :3770 days ago
விழுப்புரம்: விழுப்புரம் வண்டிமேடு கே.வி.ஆர்., நகர் ஸ்ரீ அபிநவ மந்த்ராலயத்தில் அரசு-வேம்பு திருக்கல்யாணம் நடந்தது. கோவில் கும்பாபி÷ ஷக நாள் விழாவை யொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து 8:00 மணிக்கு அரசு-வேம்பு திருக்கல்யாண நிகழ்ச்சி, 9:00 மணிக்கு ராகவேந்திரர் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் 10:00 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு ஸ்ரீ அரிபஜன் குருவார பஜனை மண்டலி நடந்தது. ஏற்பாடுகளை ராகவேந்திரா சுவாமிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.