பூசை செய்வதற்கு உரியவையாகாத மலர்களும் பத்திரங்களும்!
ADDED :4084 days ago
அங்கையிற் கொய்தமலர் ஆடையில் எடுத்தமலர்
கல்பூ மிதனில் வீழ்ந்தபூ
அர்க்கபத் திரமதனில் ஆமணக் கிலைதனில்
அமைத்தமலர் பூச னைசெயிற்
பங்கமுறு முன்செய்த புண்ணியமெ லாம்பூசை
பத்திரங் கிள்ளி யாற்றிற்
பகைவரை யொழிக்கும்நன் மலர்கிள்ளி யாற்றிலோ
பாக்கியம் எலாம்ந சிக்கும்
பொங்குமது பிரமகத் தியினுறும் பாவமாம்
புண்ணியர் அறிந்து னைநிதம்
பூசனைபு ரிந்தடவு ரைத்தனைகொல் பாதகப்
புலைய ராயினு மோர்தினம்
செங்கையில் உனைக்கண்ட வுடன்முத்தி சேரஅவர்
செனனகோ டிகள்அ றுக்கும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.