தெரிசிக்கலாகாத காலங்கள்!
ADDED :3760 days ago
ஓதும்உயர் ஆலய மதில்திருக் காப்பிட்டுறும்பொ ழுதகா லத்தினும்உற்சவப் பவனிவரு பொழுதும்அஞ் சனமாடியுறுபூ சையமை யத்தினும்தீதகல் திரைப்படா மிடினும்உட் சென்றெமைத்தெரிசித்தி டாரு ணர்ந்தோர்செய்யில்நர குறுவர்அபி டேககா லந்தனில்தேவிகேள் நமது கோயில்மேதகுப்ர தட்சணம் செய்தவர்க்கு ஆயுள்கெடும்மிக்க முன்புரி புண்யமும்வீயும்என நான்மறையொ டாகம புராணம்விளம்பினைமுன் அம்மை கேட்பச்சீதரன் அயன்சுருதி மாமுடிகள் நாடரியதெய்விக பரப்பி ரமமேசிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.