திருக்கோயிலை வலம்வரும் விதி!
ADDED :3796 days ago
செப்பரிய இருகரம் தொங்கப்ர தட்சணம்
செய்யின் பசாச மாவர்
சேர்ந்தகைப் பந்தன முடன்செயின் இராக்கதச்
செனனமுறும் இடைத னிற்கை
ஒப்பினா ரசுரராவர் ஆதலால் இருகரமும்
உச்சிமிசை கூப்பி யீரைந்(து)
உறுமதி நிறைந்தசூல் ஆயிழைத தும்பறல்
உதககுட மொடுசெல் லல்போல்
இப்புவியில் ஒருவலங் கணபதிக் கிரவிக்கு
இரண்டெமக்கு ஒருமூன் றுநான்(கு)
இமையமகள் மாலுக்கும் அரசினுக்கு ஏழ்வலம்
இதெண்குறை வுறாது மென்மேல்
திப்பிய சிவாலயத் திருவலம்செய் கென்று
செப்பி னாய்முறை யாகமம்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.