பழநி ரோப் கார் சேவை இன்று மீண்டும் துவக்கம்!
ADDED :3766 days ago
பழநி: பழநி மலைக்கோயில் ரோப் கார் பராமரிப்பு பணிகள் முடிந்து ஒரு மாதத்திற்குப்பின் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் 3 நிமிடத்தில் செல்லும் வகையில் ரோப் கார் இயக்கப்படுகிறது. பராமரிப்பு பணிக்காக மே 8ல் சேவை நிறுத்தப்பட்டது.ஜூன் 9ல் பெட்டிகளில் குறிப்பிட்ட அளவு எடைக்கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடந்தது. அதில் ரோப்கார் பாதுகாப்பு குழுவினர் அனுமதி வழங்கினர். இதனால், இன்று காலை 8 மணிக்கு சிறப்பு பூஜைக்கு பின் ரோப் கார் மீண்டும் இயக்கப்படுகிறது.