உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரிக்கல் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

பரிக்கல் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

உளுந்தூர்பேட்டை: பரிக்கல் வரசித்தி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடந்தது.   உளுந்தூர்பேட்டை தாலுகா, பரிக்கல் வரசித்தி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.   அதனையொட்டி கடந்த 8ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி பூஜை, கணபதி ஹோமம், மாலை 4:00 மணிக்கு புண்யாவஜனம், வாஸ்து பூஜை,   அங்குரார்பணம், முதல் கால பூஜை நடந்தது. 9ம் தேதி காலை 7:00 மணிக்கு 2ம் கால பூஜை, புண்யாவஜனம், பூர்ணாஹதி, தீபாரதனையும், மாலை   7:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, ஹோமம், பூர்ணாஹதி தீபாரதனை நடந்தது. 10ம் தேதி காலை 9:00 மணிக்கு நுõதன விக்ரஹங்களுக்கு கரி÷  காலம், நான்காம் கால பூஜை, பூர்ணாஹதி, தீபாரதனையும், மாலை 5:00 மணிக்கு விசேஷ சந்தி ரக்ஷாபந்தனம், ஐந்தாம் கால பூஜை, ஹோமம், பூ  ர்ணாஹதி, அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது.  அதனை தொடர்ந்து நேற்று காலை 4:00 மணிக்கு கோ பூஜை, நாடி சந்தனம், ஆறாம் கால யாக பூஜை,   மகா பூர்ணாஹதி தீபாரதனை நடந்தது. அதனை தொடர்ந்து காலை 7:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புற்பபாடும், காலை 8:30 மணிக்கு கோபுர   கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் விநாயகா கலை கல்லுõரி சேர்மன் நமச்சிவாயம், ஒன்றிய துணை ÷  சர்மன் சாய்ராம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !