வடுக்குப்பம் கோவிலில் அலங்கார திருமஞ்சனம்
ADDED :3768 days ago
நெட்டப்பாக்கம் : வடுக்குப்பம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் அலங்கார திருமஞ்சனம் நாளை 13ம் தேதி நடக்கிறது. நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பம் கிராமத்தில் உள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் நாளை 13ம் தேதி, திருவேங்கடமுடையான், மூலவர் அலங்கார திருமஞ்சனம் காலை 8 மணிக்கு நடக்கிறது. இதனையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை வடுக்குப்பம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.