கெங்கையம்மன் கோவிலில் பாலாலயம்
ADDED :3769 days ago
உத்திரமேரூர்: பழவேரி கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் நேற்று பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பழவேரி கிராமம். இப்பகுதியில், கிராமத்திற்கு சொந்தமான கெங்கையம்மன் கோவிலை, கிராமவாசிகள் பல ஆண்டுகளாக பராமரித்து வருகின்றனர். இக்கோவிலை புனரமைத்து, புதிய வடிவில் சீரமைத்திட, கடந்த மாதம் கிராமவாசிகள் தீர்மானித்தனர். அதன் தொடர்ச்சியாக, நேற்று காலை, 10:00 மணிக்கு விக்னேஸ்வரா பூஜை, சுத்திபுண்ணியாவாசம், சங்கல்ப பூஜை, கோ பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி ஆகிய பூஜைகளுடன் பாலாலயம் நடந்தது.